புதிய தொழிலை  ஆரம்பிக்கும்  முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

புதிய தொழிலை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

246 VIEWS | Published on 30/03/2018

உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்துகொள்ளவேண்டிய 6 கேள்விகள்.

தொழில் முயற்சி ஒன்றினை முன் கொண்டு செல்வதற்காக பொருட்டு பல சவால்களை எதிர்கொள்ளவேண்டி நிர்பந்திக்கப்பட்டு இருப்போம். அதில் மிகவும் முக்கியமானது குறிப்பிட்ட தொழில் தொடங்கியவரின் (Founders)  அடிப்படை யோசனைகளை   கடைபிடித்தல் ஆகும்  

தொழில் முயற்சி ஒன்றினை  வழிநடத்தி செல்வதற்காக அந்த தொழிலை தொடங்கிய நிறுவுனர், தாம் உருவாக்கிய அடிப்படை வழிவகைகளை  தமக்கு அடுத்தநிலையில் இருப்பவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என  எழுதப்படாத விதியாக மாற்றிவைத்திருப்பது ஒவ்வொரு தொழிலுக்குமான அடிப்படை விடயம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வகையாக நிறுவுனர்  குறிப்பிட்ட தொழிலை முன்னேற்றுவதற்கான சகல விடயங்களையும்  அதிகளவில்  தமது  கட்டுப்பாட்டிலேயே  வைத்திருப்பதால் பல நன்மை மற்றும் தீமைகளை,  எதிர்கொள்ள வேண்டியும் இருப்பர் என அறிய முடிகின்றது.

இவ்வாறு ஆரம்பகர்த்தாக்கள் வகுத்து கொடுத்த அடிப்படை வழிவகைகள் தொழிலை முன்கொண்டு நடத்துவதற்கு முற்றிலும் உதவியாக இருக்குமா என்பதில் ஐயப்பாடும்  உள்ளது.

GOOGLE  நிறுவனத்தின் பகுப்பாய்வுத்துறை முன்னை நாள் தலைமை பதவி வகுத்தவர் எமி சாங் ,  இவரின் அனுபவ பகிர்வாக இந்த கட்டுரை அமைகின்றது. இவ்வாறு வினைதிறமிக்க  தொழில் ஆரம்பிப்பாளராக  நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்துகொள்வதன் அவசிட்டத்தினை விவரித்து இருக்கின்றார்.

இவ்வாறு உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்துகொள்ளும் வகையில் பின்வரும் 6 கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும் என அறியத்தந்துள்ளார்.

 

1. நாம் விரும்பும் தாக்கத்தை நாமே பின்பற்றி கொள்ள முடியுமா?

இனம்காணப்பட்ட பல தொழில் நிறுவுனர்கள்  எப்பொழுதும் மகிழ்ச்சியாக  இருந்ததே இல்லை என்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். பொதுவாக நிறுவுனர் நிலையில் உள்ளவர்கள்  தொழிலை ஆரம்பிக்கும் போதே தாம்  அடைய நினைக்கும் இலக்குகளை உடனடியாக அடைந்துவிடுவதும் இல்லை, அவ்வாறே தொழிலின் முன்னேற்றகரமான தேர்ச்சியினை உடனடியாக அடைந்து கொள்வதும் இல்லை என்றே கூற வேண்டும்.

சாதாரண தொழில் புரிவோர் நிலையினை தொடர்ந்து C -SUIT  எனப்படும் தொழில் உச்சநிலை குழுமத்தினை நாம் அடைந்துகொள்ளும்போது நமக்கு நாமே  கேட்டுக்கொள்ள வேண்டிய அதி முக்கியமான கேள்வியாக  தாம் குறிப்பிட்ட நிலைக்கு தகுதியானவரா? அல்லது தாம் விரும்பும் தாக்கத்தினை தாமே எடுத்துக்கொள்ள முடியுமாக இருக்கின்றதா? என்பது முக்கிய கேள்வியாக  கேட்டுக்கொள்வது அவசியம் ஆகும். இது எம்மைப்பற்றிய சுயமதிப்பீட்டுக்கு முக்கியமானதொரு கேள்வி ஆகும்.

சிறந்த ஒரு ஆன்லைன் மென்பொருள் வணிகம் என்பது விரைவாகவும், வினைத்திறனாகவும் அமைவதெற்கு என அவசியமான விடயங்கள் என்ன என்பதனை  பிரபல அடோப் நிறுவன ஆரம்பகால நிர்வாகி எரிக் லார்சன் தெரிவித்திருப்பதாக அறியப்படுகின்றது.

இவரை மேலும்  அணுகிய போது , தாம் அடைந்துகொள்ள போகும் அவ்வந்த நாட்களுக்கான இலக்கு நிலைகளை தாம் முன் கூட்டியே  அறிந்து வைத்திருப்பதாக  அவர் பலமுறை  தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தாம் எதிர்கொள்ள இருக்கும் இலக்குகளை பெரிய அளவில்  நிர்மாணித்து  தீர்மானிப்பதில் மட்டுமல்ல, அவற்றை தொடர்ந்தும் கொண்டு செல்ல முடியுமா என்பதில் தான்  கணிப்பீடும் ஸ்திரத்தன்மையும் உள்ளடங்கியுள்ளது என இனம்காணப்பட்டுள்ளது.

 

2. தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எனக்கு ஏதுவானதா?

தொழில் முனைவோருக்கு, இடைநிலை தொழிலாளர்களுக்கும் இடையிலேயே அவ்வப்போது முறுகல் நிலை பெருவாரியாக ஏற்படும் என்பது மறுப்பற்ற உண்மை ஆகும். தொழில் தருனரை  பொறுத்த வகையில் அந்த தருணத்திலான வெற்றிடத்தினை நிரப்பிக்கொள்வதிலேயே பலவகையில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது. அதாவது அவ்வந்த தருணத்திற்கு உள்ளெடுக்கும் வலி நிவாரண மாத்திரைகளை போன்று  அந்த கணத்துக்கான தேர்வாக மட்டுமே அமைந்துவிடுகின்றன.

இவ்வாறு நடைமுறை பொருளாதாரம் மற்றும் விஞ்ஞான ரீதியில் சுய கணிப்பீட்டுக்கான முடிவினை எடுத்துக்கொள்ள நேர்தல் என்பது தொழில் நிர்வாக திறமை என கணிப்பிடப்படுகின்றது.இவ்வகை  திறனுடையவர்கள் இலகுவில் குறிப்பிட்ட தமது தொழிலை   மிக நீண்டகாலம்  முன்கொண்டு செல்லும் தகுதியுடையவர் என கருத்திக்கொள்ளலாம்.

 

3. எமது இணை நிறுவுனர் யார் ?

தத்தமது நிறுவனங்களுக்கான தலைமை நிர்வாகிகளாக  யாரை தேர்வு செய்வது என்ற ஐயப்பாடு அனைவருக்கும் உள்ளது. அதாவது நிறுவனத்தை முன் கொண்டு செல்ல தமக்கு இணையாக நிர்வாக முறைமைகளை யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுவது சாதாரணமானது. இவ்வாறு தமக்கு இணையாக பொதுவாக பெரிய நிறுவனங்கள் பிற நிறுவனங்களில் முன்னமே பணிபுரிந்த  முக்கியஸ்தர்களையே நியமிப்பது வழக்கமாக இருக்கும். அதாவது நிர்வாக இயக்குனர்களாக தேர்ந்த அனுபவம் மிக்கவர்களே காணப்படுவர். 

இதன் காரணமாக தொழிலானது பாதுகாக்கப்படும் என்ற தன்மை நிலவுகின்றது.

 

4. மொத்த நிதியினையும் தாமே சுமப்பதா?

தனிப்பட்ட சேமிப்பு மற்றும் தம்மை சேர்ந்தவர்களின் நிதியிடல் மூலமாக பெறப்படும் வளங்களை கொண்டே இன்றுவரை ஒவ்வொரு நிறுவனங்களும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. இவ்வகை நிதி சுமையினை தாமே பொறுப்பேற்றுக்கொள்ள இக்காலத்து தொழில் முயற்சியாளர்கள் விரும்புவதில்லை. மாறாக நிதி மூலங்களை  இலகுவாகவும், விளைதிறனுடன் பிற மூலங்களில் இருந்து எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதில் தமது கரிசனையை செலுத்தவே விரும்புவார்கள்.  

 

5. தமக்கு தேவையான தனிப்பட்ட ஆதரவு உள்ளதா?

உயரிய தலைமைகளின் மத்தியில் தத்தமது நிலைகளுக்கான தனிப்பட்ட பக்கபலத்தினை பெற்றுக்கொள்வது என்பது மிகவும் கடினமான செயல் ஆகும். பொதுவாக C -மட்ட தலைமைகள் குழாமில் இருந்து இவர்களின் இணை நிறுவனர்கள் மற்றும் தலைமைகளுக்கு இடையில் போட்டித்தன்மையே நிலவும் அன்றில் தனிப்பட்ட உதவிகள் கிடைப்பது மிகவும் அரியதான  செயலாகும் .

பொதுவாக தலைமைத்துவப்பண்பின்  மிக உயர்ந்த மட்டத்தை அடைவது கடினமாகவும் மன அழுத்தமும் கொண்டது என அறியப்படுகின்றது. நிறுவன கட்டமைப்புகளின் பற்றாக்குறை - பயன்கள், பயிற்சி, சம்பளம் போன்ற விடயங்கள் தொழிலின்  ஆரம்ப  சூழ்நிலைகளில் ஒரு நிர்வாகியின் தனிப்பட்ட ஆதரவு வலையமைப்பு குறிப்பாக வலுவாக இருக்க வேண்டும் என்பதாகும். தனிப்பட்ட ஆதரவு என்பது  முதன்மையான  இணை நிறுவனர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து வருகிறது என்றால் , அதன் மேம்பட்ட தாக்கம் மறுக்க முடியாதது. 

 

6. தோல்வி நிலை அடைந்தால்  என்ன செய்வது?

எந்தவொரு முயற்சியும் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோல்வி நிலையினை கடந்தோ, அல்லது ஒரு சந்தர்ப்பத்தில் சிறியளவு சறுக்கல் நிலையினையேனும் சந்தித்திருக்க வேண்டியோ வந்திருக்கும். இது இன்னும் சிலருக்கு ஓரிரு முறையல்ல, பல முறைகளிலும் இடம்பெற்றிருக்க தவறுவதில்லை.

இவ்வகையாக நீங்கள் எதிர்கொள்ளும் தோல்வி நிலையானது எந்த வகையில் ஏற்பட்டுள்ளது என்பன பற்றிய அறிவினை தொழில் நிறுவுனராக  நீங்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானது ஆகும் . அதன் பின்னர் அவ்வாறு அடிக்கடி நிகழும் இந்த தோல்வி நிலையில் இருந்து எவ்வாறு மீள வருவது என்றும், அல்லது வேறு பாதையினை தேர்வு செய்தல் என்பதில் இருந்தும் அறிந்து வைத்து இருப்பதுவே  நிறுவுனர் ஒருவரின் சிறப்பான பண்பாக கருதப்படுவது ஆகும்.

Share with your friends


Back