நேர்காணல் (INTERVIEW) பயம் நீங்க 7 யோசனைகள்

நேர்காணல் (INTERVIEW) பயம் நீங்க 7 யோசனைகள்

269 VIEWS | Published on 30/03/2018

வேலைக்கான நேர்முகத்தேர்வை கண்டு இனி நீங்கள் அச்சப்பட தேவையில்லை.

தொழில் ரீதியில் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தினை நோக்கி செல்ல இருக்கும் அனைவரும் கட்டாயம் கடக்க வேண்டிய கட்டமே நேர்முக தேர்வு ஆகும். நீங்கள் உங்கள் தொழிலை நிலையாக வைத்துக்கொள்ளவும், வாழ்க்கையின் முன்னேற்ற நிலைக்கும் அடித்த்தளமாக அமைவது நேர்முக தேர்வு ஆகும்.

The First  impression  is the best impression என்பார்கள். அதாவது உங்களை பற்றிய முதல் ஈர்ப்பிலேயே நீங்கள் கொடுக்கும் நல்ல வெளிகாட்டலே உங்கள் பற்றி இறுதிவரைக்குமான எண்ணமாக  இருக்கும். இதனால் வேலைக்கு செல்வதற்கான நேர்முகத்தேர்வு என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியம் வாய்ந்தது என சொல்லலாம்.

பலருக்கும் உள்ள பொதுவான பயமே நேர்முகத்தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பது ஆகும். இதனால் அந்த அச்சத்திலேயே பலரும் பல நல்ல வேலைகளை தவற விடுவதும் உண்டு. ஆனால் ஒரு சிலர் தகுதிகள் எதுவும் இல்லாமல் கூட திறமையாக நேர்முகத்தேர்வில் பங்குபற்றி வெற்றிபெற்றதையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

அவ்வாறு பயமில்லாமல் நேர்முகத்தேர்வில் பங்குகொள்ள 7 யோசனைகள் இதோ.

1. பயம் வேண்டாம் . தேர்வு செய்ப்பவர்கள் நம் பக்கமே.

உங்களுக்கு பயம் எந்த வகையில் இருந்தாலும் அதனை வெளிகாட்டிக்கொள்ள கூடாது. உங்கள் வெற்றியினையே உங்களை தேர்வுசெய்ப்பவர்கள் எதிர்பார்த்திருப்பார்களே அன்றி பயத்தினை அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

2. உங்கள் இயல்பு நிலையினை வெளிக்காட்டுங்கள். 

பொதுவாக வேலை பற்றிய கேள்வி கேட்கப்படும்போது, குறிப்பிட்ட வேலை மற்றும் கம்பெனி தொடர்பான விபரித்தலை தவிர்த்து, அந்த வேலைக்கு  நீங்கள் எவ்வாறு தகுதி உடையவர் என்பதை சொல்லுங்கள். இதன் மூலம் நேர சேமிப்பு மற்றும் நேர்காணுபவர் நினைப்பதை சுருக்கமாக சொல்வதன் மூலம் அவர்களின் கவனத்தினை உங்கள் பக்கம் விரைவாக ஈர்த்துவிடலாம்.

3. ஏன் இந்த தொழிலை தேர்வு செய்தீர்கள்.

இந்த கேள்வியை பொதுவாக எல்லா நேர்முகத்தேர்வில் கண்டிப்பாக கேட்பார்கள். இதற்கு நீங்கள் அளிக்கவிருக்கும் பதிலில், அந்த வேலை உங்களுக்கானதா என்பது உறுதி செய்யப்படும். அதாவது இந்த கம்பெனி பற்றியும், நீங்கள் செய்யப்போகும் வேலையை பற்றியும் நீங்கள் எந்தளவு அறிந்து வைத்துளீர்கள் என்பது தொடர்பில் தேர்வு செய்ப்பவர்கள் மறைமுகமாக கேட்கும் கேள்வியே இது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே பதிலளிக்கும் போது குறிப்பிட்ட தொழில், உங்களுக்கான வேலை மற்றும் கம்பெனியின் சுயவிவரம் என்பன தொடர்பில் இந்த கேள்விக்கு விளக்கம் தருவது புத்திசாலித்தனம்.

4. அலுவலகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். 

வேலைக்கான தேர்வுக்கு செல்வதற்கு முதல் அந்த அலுவலகம் பற்றி முழுமையாக அறிந்து வைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறே அலுவலக சூழலை மட்டுமல்ல சுற்றுப்புற பௌதிக சூழலையும் அறிந்து வைத்துக்கொள்வது நல்லது. அருகிலுள்ள நிலையங்கள், மற்றும், அலுவலகங்கள் என்பனவும் , சூழலில் குறிப்பிட்ட அலுவலகம் கொண்டுள்ள நிலை பற்றிய தெளிவையும் தெரிந்து வைத்துக்கொள்வது முக்கியத்துவம் பெறுகின்றது. இதன் பின்னர் நீங்கள் நேர்முக தேர்வினை எதிர்கொள்ளும்போது தைரியமாகவும், அறிதலுடனும் எதிர்கொள்ள இலகுவாக இருக்கும்.

5. தெளிவாயிருங்கள். 

தேர்வுக்கு செல்லும் முதல் உங்கள் மனநிலையானது தெளிவாகவும், குழப்பமில்லாமல் இருக்க வேண்டியது அவசியம், உங்கள் சிந்தனை நேர்முகத்தேர்வை பற்றியும், குறிப்பிட்ட தொழில்பற்றியுமானதாகவே இருக்க வேண்டும். அத்துடன் தேர்வுசெய்ப்பவர்கள் கேட்கவிருக்கும் கேள்விகளுக்கு தெளிவாக பதிலளிப்பது சிறந்த பண்பு 

6. உடல்நிலையில் உறுதியாக இருங்கள்.

உங்களுக்கு காலை 10 மணிக்கு நேர்முகம் இருந்தால் முதல்நாள் நன்கு தூங்கி எழும்புங்கள், தூக்கமின்மை, சோர்வு , உடல் உபாதைகள்  போன்ற விடயங்கள் நேர்முகத்தேர்வில் உங்களை சரியாக பங்கேற்கவிடாமல் செய்யும். உடல் ஆரோக்கியத்திலும் மன வலிமையிலும் உறுதியாக தேர்வில் பங்கு கொள்ளுங்கள்.

7. பதிலில் சிலேடைகள் கூடாது.

தேர்வு செய்ப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு "ம்ம்", "ஹா "  என்ற சிலேடை பதில்களை கூறுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறே "இருக்கலாம்," அல்லது "நான் நினைக்கின்றேன் " போன்ற பதில்களும் தவிர்க்கப்படவேண்டியது. இவ்வகை பதிலாக உங்கள் ஸ்திரமின்மையை தேர்வாளர்களுக்கு தெளிவாக காட்டிவிடும். 

குறிப்பிட்ட கேள்விக்கான பதில் தெரிந்திருந்தால்  "ஆம் ", அல்லது "இல்லை" என்ற பதிலை தெளிவாக உறுதிபட கூறுவது சிறந்த யுக்தி ஆகும். 

Share with your friends


Back