சிறிய அளவில் வியாபாரம் செய்ப்பவர்களுக்கு உகந்த அறிவுரைகள்

சிறிய அளவில் வியாபாரம் செய்ப்பவர்களுக்கு உகந்த அறிவுரைகள்

472 VIEWS | Published on 30/03/2018

போதிய பணவசதிகள் இல்லாமல் தொழிலை தொடங்குவதால் முயற்சி செய்வதாலும் இலாபம் கிடைக்காது என்பது இல்லை. பெரும்பாலானவர்கள் இவ்வாறு சிறிய முதலீட்டினை கொண்டு பெரிய அளவில் இலாபம் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தான் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் குறைந்தளவு மூலதனத்துடன் சிறிய அளவில் வியாபாரம் தொடங்க இருப்பவர்களா?, அதிக முதலீடுகள் போடுவதை விட சிறய பணத்தொகையில் அமைந்த முதலீடுகள் மற்றும் முயற்சிகளை வைத்து உங்கள் வியாபாரத்தை நடத்துவதன் மூலம் நல்ல இலாப வருமானத்தை உழைத்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்களாக இருந்தால் உங்களை போன்ற வியாபாரிகள் எவ்வாறு நல்ல இலாபத்தினை குறுகிய காலத்திலேயே பெற்றுகொள்வது  என்ற கேள்விக்கான பதிலாக அமைகின்றது இந்த கட்டுரை.

போதிய பணவசதிகள் இல்லாமல் தொழிலை தொடங்குவதால் முயற்சி செய்வதாலும் இலாபம் கிடைக்காது என்பது இல்லை. பெரும்பாலானவர்கள் இவ்வாறு சிறிய முதலீட்டினை கொண்டு பெரிய அளவில் இலாபம் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தான் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு சிறிய அளவில் வியாபாரம் செய்ப்பவர்களுக்கான அறிவுரைகள் சில 

1. தரவுகளை தெளிவாக பேணுங்கள்.

உங்களின் வியாபாரம் தொடர்பாக பேணும் அலகுகள், பொருட்களின் தரவுகள், மற்றும் கணக்கியல் தரவுகளை துல்லியமாகவும் , தெளிவாகவும்  பேணுவது சிறிய வியாபாரி என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. பழைய தரவுகள் காணப்பட்டால் அது மிகவும் தேவை என்றாலே தவிர அவற்றினை வீணாக சேமிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.உங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை உறுதிசெய்துக்குவதற்கு நீங்கள் தரவுகளை பேணுவது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

நீங்கள் உங்கள் வியாபாரம் தொடர்பில் வெளியிடும் தரவுகள் சரியானதாக இல்லாவிட்டால் உங்கள் விற்பனை சந்தைப்படுத்தலானது  தோல்வியினை அடையும் என ஆய்வாளர்கள் அறியத்தருகின்றனர்.

2. உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து வைத்திருங்கள். 

சிறிய அளவோ,  அல்லது பெரிய அளவோ, வியாபாரம் என்ற ரீதியில் உங்கள் இலக்கு வாடிக்கையாளர்கள் யார் என்பதை நீங்கள் இனம் கண்டு வைத்துக்கொள்ளுங்கள். அவர்களின் தொடர்பில் பல்வேறுபட்ட ரீதியில் ஆய்வு செய்து அந்த இலக்கு வாடிக்கையாளர்களை எவ்வாறு கவர்ந்து உங்கள் வியாபாரத்தின் மூலம் அவர்களை திருப்திபடுத்துவது மட்டுமன்றி அவர்களின் மூலமும் உங்கள் வியாபாரத்தினை எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது என்பதையும் நீங்கள் கண்டிப்பாக அறிந்து வைத்துக் கொள்வது அவசியமானது.

3. உங்களின் உள்ளடக்கம் தொடர்பில் இலக்கினை கொண்டிருங்கள். 

வியாபார நிலையில் இலக்கு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. முக்கியமாக உங்களின் இலக்கு தொடர்பான உள்ளடக்கம் என்பது பற்றி நீங்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் வாய்ந்தது.பொழுதுபோக்கு, நுண்ணறிவு போன்ற விடயங்களில் கவனத்தினை செலுத்துவதை விட உங்கள் பொருள் உள்ளடக்கம் தொடர்பில் உங்களின் நுகர்வோருக்கு தெளிவுபடுத்துவதே சிறந்த வியாபார யுக்தி ஆகும்.

4.  மின்னஞ்சல் மூலம் வியாபார மேம்படுத்தல் விடயங்களை பேணுங்கள்.

வாடிக்கையாளர்களின் திருப்தி நிலையே நமது வியாபாரத்தின் வெற்றி ஆகும். எப்பொழுதும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பினை பேனும் பொருட்டு  எழுத்து மூலமான மின்னஞ்சல் தொடர்பாடலை பேணுவதே வியாபாரி ஒருவருக்கான சிறந்த பண்பு ஆகும். பெரும்பாலும் இப்பொழுது மின்னஞ்ச்சல் தொடர்பாடல் என்பது அரிதாகிப்போன விடயம் ஆகும். மாறாக மின் அஞ்சலின் மூலம் வாடிக்கையாளர் கூறிய கருத்துக்களை மற்றும் அவர்களின் கேள்வி போன்ற தரவு சேமிப்பதற்கும், உண்மைத்தன்மையை பேணுவதற்குமான சிறந்த ஊடகம் மின்னஞ்சல் ஆகும். அது மட்டுமன்றி மின் அஞ்சல் முறைமையே தரமிக்க தொடர்பாடல் சாதனமாக இன்றுவரை கருதப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

5. சமூக வலைத்தளங்களின் மூலம் உந்துதலை ஏற்படுத்துங்கள். 

இக்கால வணிகங்கள் அனைத்திற்குமான சிறந்த ஊடக முறை சமூக வலைத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் சந்தைப்படுத்தல் ஆகும். உங்கள் சமூக வலைதள பக்கங்களின் ஊடாக எப்பொழுதும் வாடிக்கையாளர்களுக்கு உந்துதலை அளிப்பதன் மூலம் மேலும் மேலும் உங்கள்  வியாபாரத்தினை பற்றி வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் உங்கள் வியாபாரமும் விருத்தி அடையும் என்பது மறுப்பற்ற  உண்மை.

Share with your friends


Back